மஹிந்த ஹோட்டலில் கீரைக்கறியில் நத்தை

 


வவுனியா நெளுக்குளம் பகுதியில் உள்ள மஹிந்த ஹோட்டலில் மதிய உணவுக்காக சென்றிருந்த வேளையில் கீரைக்கறியில் நத்தை காணப்பட்ட சம்பவம் வாடிக்கையாளருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுது.

இந்த சம்பவம் நேற்றைய தினம் மதியம் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. இதனையடுத்து அது குறித்து பணியாளர் மற்றும் உரிமையாளரிடம் கூறியும் அதைப்பற்றி அவர்கள் எதுவித காரணங்களோ அல்லது மன்னிப்போ கோரவில்லை எனவும் நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

அதோடு குறித்த ஹோட்டல் பணியாளர்கள் அசமந்தப்போக்குடனே நடந்து கொண்டதாக கூறியுள்ள பாதிக்கப்பட்டவர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.