மேற்கிந்திய தீவுகள் அணிக்கான வெற்றி இலக்கு!


 இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் இடம்பெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 297 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி தனது முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 204 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 253 ஓட்டங்களை பெற்றது.

இந்நிலையில் தனது இரண்டாவது இன்னிங்க்ஸை துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சற்று முன்னர் 9 விக்கெட்டுக்களை இழந்து 345 ஓட்டங்களை பெற்றிருந்த போது ஆட்டத்தை இடைநிறுத்தியது.

இலங்கை அணி சார்பில் சிறப்பான துடுப்பாட்டத்தை வௌிப்படுத்திய தனஞ்சய டி சில்வா ஆட்டமிழக்காது 155 ஓட்டங்களை பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

அதன்படி, போட்டியில் வெற்றிப் பெறுவதற்காக மேற்கிந்தியதீவுகள் அணிக்கு 297 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.