யாழிலிருந்து புகையிரதத்துடன் மோதுண்டு ஒருவர் பலி!!

 யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த புகையிரதத்துடன் கப் ரக வாகனம் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் சற்றுமுன்னர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.குறித்த விபத்தில் தவசிகுளம், கொடிகாமம் பகுதியை சேர்ந்த 32 வயதுடைய சூசைநாதன் பிரதீபன் என்பவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

மஞ்சள் நிற சமிக்கை விளக்கு ஒளிர்ந்து கொண்டிருந்த போது குறித்த வாகனம் கடவையை கடக்க முற்பட்ட போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது விபத்தில் படுகாயமடைந்தவரை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் மரணமடைந்துள்ளார்.

உயிரிழந்த நபரின் சடலம் சாவகச்சேரி ஆதார வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன்,இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colomboகருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.