ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது
ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சாவகச்சேரி மதுவரி நிலையத்தினர் தெரிவித்தனர்.
நேற்று (13) நண்பகல் யாழ்ப்பாணம் கல்லுண்டாய் வெளியூடாக ஹெரோயின் போதைப்பொருள் கடத்தப்படுவதாக சாவகச்சேரி மதுவரி நிலையத்தினருக்கு இரகசிய தகவல் ஒன்று கிடைக்கப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து உதவி மதுவரி ஆணையாளர் தர்மசீலன் மற்றும் மதுவரி அத்தியட்சகர் தங்கராசா ஆகியோரின் வழிநடத்தலில் சாவகச்சேரி மதுவரி நிலைய பொறுப்பதிகாரி ராஜ்மோகன் தலைமையிலான குழுவினர் அப்பகுதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய நவாலி பகுதியைச் சேர்ந்த 36 வயது நபர் ஒருவரை சோதனையிட்டபோது அவரிடம் 18.670 கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.
-நிருபர் பிரதீபன்-
கருத்துகள் இல்லை