சுப்ரமணிய பாரதியார் வாழ்க்கை வரலாறு

 



பிறப்பு 

பாரதியார் 1882 ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதியன்று தமிழ் நாட்டின் திருநெல்வேலி சீமையில் உள்ள  எட்டயபுரம் என்ற ஊரில் பிறந்தார். (அவர் வாழ்ந்த காலத்தில் தூத்துக்குடி மாவட்டமும் திருநெல்வேலி சீமை என்ற பெயரோடுதான் அழைக்கப்பட்டது) இவரது தந்தையின் பெயர் சின்னசாமி ஐயர் மற்றும் இவரது தாயாரின் பெயர் இலக்குமி அம்மையார்.

இயற்பெயர் 

பாரதியாரின் பெற்றோர் அவருக்கு சுப்பிரமணியம் என்ற பெயரை சூட்டினார்கள். இளம் வயதில் சுப்பிரமணியம் அனைவராலும் செல்லமாக சுப்பையா என்ற பெயரோடு தான் அழைக்கப்பட்டார்.

பாரதியார் பெயர் காரணம்

சுப்பிரமணியம் வருங்காலத்தில் மிகப்பெரிய கௌரவமான வேலைக்கு செல்ல வேண்டும் என்று அவரது தந்தை விரும்பினார். அதற்காக சுப்பிரமணியத்தை ஆங்கிலவழி பள்ளிக்கூடத்தில் சேர்த்தார். ஆனால் சுப்பிரமணியத்துக்கு தமிழில் கவிதைகள் எழுதுவதில் தான் அதிகம் நாட்டம் இருந்தது. தனது 11ஆம் வயதிலேயே கவிதை எழுதுவதை அவர் தொடங்கிவிட்டார். சுப்பிரமணியத்தின் கவிதை எழுதும் திறமையைக் கண்டு வியந்த  எட்டயபுரத்தின் மன்னர், "பாரதி" என்ற பட்டத்தை சுப்பிரமணியத்திற்கு வழங்கினார். பாரதி என்று சொல்லிற்கு சரசுவதி தேவியால் ஆசிர்வதிக்கப்பட்டபவர் என்று பொருள். அன்றிலிருந்துதான் சுப்பிரமணியம் என்று அழைக்கப்பட்டவர் சுப்ரமணிய பாரதியாக மாறினார்.

குடும்ப வாழ்க்கை



1897ஆம் ஆண்டு பாரதியாருக்கு பெற்றோர்களால் திருமணம் செய்து வைக்கப்பட்டது. திருமணத்தின் போது அவர் வெறும் 14 வயது நிரம்பிய சிறுவனாகவே இருந்தார். பாரதியாரின் மனைவியின் பெயர் செல்லம்மாள். சுப்பிரமணிய பாரதி மற்றும் செல்லம்மாள் தம்பதியினருக்கு தங்கம்மாள், சகுந்தலா என 2 மகள்கள் இருந்தார்கள். தங்கம்மாள் 1904 ஆம் ஆண்டிலும், சகுந்தலா 1908 ஆம் ஆண்டிலும் பிறந்தனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.