மட்டு. ஈரளக்குளம் விவசாயிகள் வீதியை மறித்து போராட்டம்!


சட்டவிரோத மண் அகழ்வு காரணமாக தங்களது வீதிகள் முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் மட்டக்களப்பு மண் வளம் சூறையாடப்படுகின்றதை கண்டித்து இன்று (செவ்வாய்க்கிழமை) காலை செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட         ஈரளக்குள விவசாயிகள் வீதியை மறித்து போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

குறித்த போராட்டத்தில் அபிவிருத்திக் குழுத் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியா ழேந்திரன் ஆகியோர் உடனடியாக இதை தடுத்து நிறுத்த கோரியும் மண்ணைச் சுரண்டுவதா கிழக்கு மீட்கும் பணி என கோஷமிட்டனர்.

போராட்டக்காரர்கள் வெளி மாவட்டங்களில் இருந்து வந்த கனரக வாகனங்களை திருப்பி அனுப்பியதுடன் மண்களை ஏற்றிச்சென்ற கனரக வாகனங்களை மறித்து அனைத்து மண்ணையும் ஏற்றிய இடத்தில்  பறிக்கச் செய்துள்ளனர் .

சம்பவ இடத்திற்கு வருகை தந்த மண்ணுரிம உரிமையாளர் விதி சேதமடைந்தது வேதனைக்குரிய விடயம் எனவும் குறித்த வீதியினை தனது செலவில் செப்பனிட்டுக் தருவதாகவும் இன்றைய நாளில் இருந்து  மண்ணை வெளி மாவட்டத்துக்கு அனுப்புவதற்கு அனுமதி அளிக்க படாது என உறுதியளித்ததை அடுத்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றுள்ளனர்.

மண்களை ஏற்றிய கனரக வாகனங்கள் அனைத்து மண்ணை பறித்துவிட்டு வெறும் கனரக வாகனங்களாக  வெளி மாவட்டங்களுக்கு சென்றமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.