மர்ம கப்பல் - மட்டக்களப்பு கடற்பகுதியில்!!

 


மட்டக்களப்பு கடற்கரை பகுதியில் தரித்து நிற்கும் கப்பல் குறித்து சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகளை பாதுகாப்பு அமைச்சு நிராகரித்துள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், கடல்கரையிலிருந்து மண் அகழப்படுகின்றதாகவும், அந்த மண்ணை கப்பலொன்று கொண்டுசெல்கின்றதாக உள்ளுர் மீனவர்கள் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

நவிமார் என்ற கப்பல் 15 ம் திகதி முதல் அந்த பகுதியில் காணப்படுகின்றது. செயின்ட்கிட்ஸ் நெவிசின் கொடியுடன் கப்பல் காணப்படுகின்றது.

நான் பிரதேச செயலாளரிற்கு இது குறித்து தெரிவித்தேன் அவர் விசாரணைகளிற்காக அதிகாரிகளை அனுப்பினார் அந்த கப்பலிற்கு அருகில் சென்ற அவர்கள் ஆயுதங்களுடன் படகு காணப்படுவதை பார்த்துள்ளனர்.

எனினும் அவர்கள் விசாரணைகளை மேற்கொள்ளாமல் வந்துள்ளனர் என ஊடகமொன்றிற்கு சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

 இது குறித்து தெரிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்ட கப்பல் ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து பங்களாதேசிற்கு சென்றுக்கொண்டிருந்த நிலையில் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக அவசர நிலையை எதிர்கொண்டதால் அங்கு காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.