பிக் பேஷ்:சிட்னி சிக்ஸர்ஸ் அணி வெற்றி!
பிக் பேஷ் ரி-20 தொடரின் 13ஆவது லீக் போட்டியில், சிட்னி சிக்ஸர்ஸ் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.
மெல்பேர்ன் மைதானத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், சிட்னி சிக்ஸர்ஸ் அணியும் மெல்பேர்ன் ஸ்டார்ஸ் அணியும் மோதின.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சிட்னி சிக்ஸர்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மெல்பேர்ன் ஸ்டார்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில், 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 177 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, க்ளேன் மேக்ஸ்வெல் 103 ஓட்டங்களையும் நிக் லாக்கின் மற்றும் கார்ட்ரைட் ஆகியோர் தலா 23 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
சிட்னி சிக்ஸர்ஸ் அணியின் பந்துவீச்சில், ஸ்டீவ் ஓகீப், துவர்ஷுயிஸ், கிறிஸ் ஜோர்தான், கிறீஸ்டியன் மற்றும் ஹெய்டன் கெர் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 178 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய சிட்னி சிக்ஸர்ஸ் அணி, 19.4 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால், சிட்னி சிக்ஸர்ஸ் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.
இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, ஜோஸ் பிலீப்பே ஆட்டமிழக்காது 99 ஓட்டங்களையும் மொய்சஸ் ஹென்ரிக்ஸ் 29 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
மெல்பேர்ன் ஸ்டார்ஸ் அணியின் பந்துவீச்சில், பிராடி கோவ்ச், ஆடம் செம்பா மற்றும் நதன் குல்டர் நெய்ல் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 61 பந்துகளில் 2 சிக்ஸர்கள் 11 பவுண்ரிகள் அடங்களாக, ஆட்டமிழக்காது 99 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட ஜோஸ் பிலீப்பே தெரிவுசெய்யப்பட்டார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை