முல்லைத்தீவு சிறுமி மரணம்- வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்!!

 


முல்லைத்தீவு மூங்கிலாறு கிராமத்தை சேர்ந்த 13 வயது சிறுமி யோகராசா நிதர்சனாவின் கொலை தொடர்பில் பல திடுக்கிடும் தகவல்கள் பொலிஸ் விசாரணைகளில் அம்பலமாகியுள்ளது.

சிறுமி கொலை தொடர்பில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு மேலதிகமாக மேலும் நால்வரை தடுத்து வைத்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கடந்த வாரம் 15 ஆம் திகதி காணாமற்போன நிதர்சனா, கொலை செய்யப்பட் நிலையில் 18 ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்டிருந்தார். தனது வீட்டிலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ள அக்காவின் வீட்டுக்கு செல்வதாகக் கூறிவிட்டு வீட்டிலிருந்து புறப்பட்ட நிதர்சனா, பின்னர் காணாமற்போனதாக குடும்பத்தினர் ஆரம்பத்தில் கூறியிருந்தனர்.

ஆனால் இந்தக் கதைகள் எல்லாம் சோடிக்கப்பட்டவை என்பது பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. நிதர்சனா அக்காவின் கணவரை சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைது செய்து விசாரணையை ஆரம்பித்தனர்.

கடந்த சில தினங்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற விசாரணைகளின் போது சிறுமியின் கொலை தொடர்பில் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை உறுதி செய்த பொலிஸார் நிதர்சனாவின் தாய், தந்தை, அக்கா, மற்றும் மைத்துனர் முறைகொண்ட ஒருவரை தடுத்து வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

நிதர்சனாவின் தாய் இதுவரை மௌனம் கலையாத போதிலும், அவரது தந்தை நடந்த சம்பவங்களை ஒப்புதல் வாக்குமூலமாக பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார். அதன்படி வீட்டில் தங்கியிருந்த நிதர்சனா 2 மாத கர்ப்பிணியாக இருந்ததாகவும் இதனை அறிந்த அவரது தாய் கருவை கலைக்கும் முயற்சியில் ஈடுபட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

கருவை கலைப்பதற்கு சிறுமியை மயக்கமடையச் செய்யும் நோக்கில், ஏதோவொரு மருந்து வழங்கப்பட்டமை தொடர்பில் அவரது தந்தையின் வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் சிறுமியின் கருவினை கலைக்கும் முயற்சியின்போது அவர் உயிரிழந்திருக்கலாம் என்பது தற்போதைய விசாரணையின் மூலம் தெரியவருகிறது. சிறுமியின் பற்கள் கழன்று விழுந்திருந்தமை பிரேதப் பரிசோதனையின்போது தெரியவந்த நிலையில், மேலதிக பரிசோதனைக்காக பல்லின் மாதிரியொன்றை கொழும்பிற்கு அனுப்பியுள்ளதாக பொலிஸார் கூறினர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.