லாஃப்ஸ் நிறுவனம் வெளியிட்ட மகிழ்வான தகவல்!!
இன்று இரவு முதல் உள்நாட்டு எரிவாயு விநியோகத்தை ஆரம்பிக்கவுள்ளதாக லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.
ஹம்பாந்தோட்டை முனையத்துக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள லாஃப்ஸ் எரிவாயுவின் தரம் தொடர்பாக நுகர்வோர் விவகார அதிகாரசபை மற்றும் இலங்கை தர நிர்ணய கட்டளைகள் நிறுவனம் ஆகியவற்றின் அனுமதியைப் பெற்றுள்ளது.
இந்த நிலையிலேயே லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கருத்துகள் இல்லை