வடமாகாண ஆளுநர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தலைமையில் நாளை வடமாகாண ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடத்தப்படவுள்ளது. இந்த கூட்டம் மாகாண பேரவை செயலக மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக கூறப்படுகின்றது.
மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டங்கள் காலதாமதம் அடையும் நிலமையில் இந்த ஏற்பாட்டை ஆளுநர் மேறகொண்டுள்ளார்.
இந்தக் கூட்டத்துக்கு வடமாகாண மக்கள் பிரதிநிதிகள், நிர்வாக அதிகாரிகள் எனப் பலரும் அழைக்கப்பட்டுள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகின்றது.
மேற்படி கூட்டம் கடந்த 10ஆம் திகதி இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டு நாடாளுமன்றத்தில் வரவு - செலவுத் திட்ட இறுதி வாக்கெடுப்பு காரணமாக பிற்போடப்பட்ட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை