இந்தியாவில் உருவான புதிய கூட்டணி!


சமாஜ்வாடி கட்சி, ராஷ்ட்ரிய லோக் தள் கட்சியுடன் கூட்டணி அமைத்திருப்பது பா.ஜ.கவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் உத்தர பிரதேசம் உள்பட 5 மாநில சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளதால் உத்தர பிரதேசத்தில் தேர்தல் களம் பரபரப்படைந்துள்ளது. உ.பி.யில் ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸ் கட்சி தீவிரமான பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும், காங். பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும், உ.பியில் தொடர் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

அதேநேரத்தில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பா.ஜ.கவும் போராடி வருகிறது. மேலும், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளும் தனித்து போட்டியிடுவதால், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

எதிர்க்கட்சிகள் தனித்தனியாகப் போட்டியிட்டால், அது பா.ஜ.கவுக்கு சாதமாகிவிடும் என்று அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்து வரும் நிலையில், மாநில கட்சிகளுடன் கூட்டணி அமைக்க தேசிய கட்சிகள் பெரும் முயற்சி மேற்கொண்டு வருகின்றன.

பிரதான எதிர்க்கட்சியான அகிலேஷின் சமாஜ்வாதி கட்சி, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்கப்போவது இல்லை எனத் தெரிவித்திருந்ததனால், பா.ஜ.க தங்களது எதிர்ப்பு வாக்குகள் சிதறும் என எதிர்பார்த்தது.

அதேவேளை ஜெயந்த் சவுத்ரியின் ராஷ்டிரிய லோக் தள் கட்சியுடன் சமாஜ்வாதி கட்சி பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் அகிலேஷ் யாதவும் ஜெயந்த் சவுத்ரியும் நேரில் சந்தித்து கூட்டணியை உறுதி செய்தனர்.

இதன் அடுத்த கட்டமாக, இன்று நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அகிலேஷும், ஜெயந்த் சவுத்ரியும் இணைந்து வெளியிடுள்ளனர்.

ஜாட், முஸ்லிம்கள் அதிகமுள்ள மேற்கு உ.பி.யில் பா.ஜ.கவுக்கு கடும் எதிர்ப்பு நிலவுகிறது. இந்நிலையில், மேற்கு உத்தர பிரதேசத்தில் வலுவாக உள்ள ராஷ்ட்ரிய லோக் தள் கட்சியுடன் சமாஜ்வாதி கூட்டணி அமைத்திருப்பது பா.ஜ.கவுக்கு பெரும் தலையிடியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சிறுபான்மையினர் மற்றும் விவசாயிகள் பா.ஜ.க அரசு மீது கடும் அதிருப்தியில் உள்ள நிலையில், சமாஜ்வாதி கட்சி, ராஷ்ட்ரிய லோக் தள் கட்சியுடன் கூட்டணி அமைத்திருப்பது பா.ஜ.கவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்பதால் பா.ஜ.க தலைமையும், உ.பி முதல்வரும் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.