யாழில் மலேரியா நோயாளி!
இலங்கையில் நீண்ட நாட்களுக்கு பின் இலங்கையில் மலேரியா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இவ்வாறு இனங்காணப்பட்டுள்ளவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
மேலும், காய்ச்சல் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று (15-12-2021) புதன்கிழமை இரவு அனுமதிக்கப்பட்ட மல்லாகத்தைச் சேர்ந்த 27 வயதுடைய நபர் ஒருவருக்கே மலேரியா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் தென்னாபிரிக்காவில் இருந்து இலங்கைக்கு வந்த நபரொருவரே தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். கடுமையான காய்ச்சல் மற்றும் மலேரிய அறிகுறிகளுடன் நேற்றிரவு 8 மணியளவில் குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யாழ்.போதனா வைத்தியசாலையில் இருந்து யாழ்ப்பாணப் பிராந்திய மலேரியாத் தடுப்பு வைத்திய அதிகாரியின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து அவருக்கு மலேரியாத் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டது. தொற்றுக்குள்ளான நபர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
மேலும், மலேரியா அற்ற நாடுகளின் பட்டியலில் இலங்கை இடம்பெற்றுள்ள போதிலும், வெளிநாடுகளில் இருந்து வருபவர்களினால் மலேரியா பரவல் அச்சம் ஏற்பட்டுள்ளது என்றும், மலேரியா எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் நாடுகளுக்குச் செல்பவர்கள் மலேரியா முன்னெச்சரிக்கை மருத்துவ வழிகாட்டுதல்களை தகுதி வாய்ந்த மருத்துவ அதிகாரிகளிடம் பெற்றுச் செல்லுமாறும் யாழ்ப்பாணப் பிராந்திய மலேரியாத் தடுப்பு வைத்திய அதிகாரி மருத்துவர் அ. ஜெயக்குமாரன் தெரிவித்துள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை