வெற்றியிலக்காக 70 ஓட்டங்கள் பெற்றது யவ்னா கிங்ஸ் அணி!!

 


யவ்னா கிங்ஸ்  அணிக்கு வெற்றியிலக்காக   70 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது லங்கா பிரீமியர் லீக் தொடரின் 14வது போட்டி தற்போது இடம்பெற்று வருகின்றது.

கொழும்பு ஆர்.பிரேமதாஸ விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் இந்த போட்டியில் நடப்பு சம்பியனான Jaffna Kings அணியும் Dambulla Giants அணியும் பலப்பரீட்சை நாடாத்துகின்றன.

இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற யவ்னா கிங்ஸ் அணி களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய Dambulla Giants அணி நிர்ணயிக்கப்பட்ட 14.1 ஓவர்கள் நிறைவில்  சகல விக்கட்டுக்களையும் இழந்து 69 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இந்தநிலையில் 70 என்ற வெற்றியிலக்கினை நோக்கி யவ்னா கிங்ஸ் அணி இன்னும் சற்றுநேரத்தில் துடுப்பெடுத்தாட களமிறங்கவுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.