புதிய புயலுக்குப் பெயர் ஜோவட்!
தெற்கு தாய்லாந்து மற்றும் அதனையொட்டிய கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது தெற்கு அந்தமான் கடல் பகுதிக்கு நகர்ந்து வந்து இன்று தீவிர காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக அது மாறியுள்ளதாகவும், நாளை அது புயல் சின்னமாக மாற வாய்ப்பு உள்ளது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த புயல் சின்னம் நாளை மேற்கு வடமேற்கு திசையில் நகரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் சின்னத்தால் தமிழக கடலோர பகுதிகளில் சில இடங்களில் லேசான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை மறுதினம் இந்தப் புயல் சின்னம் புயலாக மாறலாமெனவும், அப்போது அதன் சீற்றம் பல மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளதென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலில் கொந்தளிப்பு காணப்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
3ஆம் திகதி உருவாககுமென எதிர்பார்க்கப்படும் புயலுக்கு ஜோவட் (ஜாவட்) என்று பெயர் சூட்டப்படவுள்ளது. இது சவுதி அரேபியா வழங்கிய பெயராகும். ஜோவட் என்றால் அரபு மொழியில் கருணை என்று அர்த்தம். ஜோவட் புயல் காரணமாக தமிழகத்தில் மீண்டும் கன மழைக்கு வாய்ப்பு இல்லை என்று இந்திய வானிலை ஆய்வு மையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
3ஆம் திகதி பிற்பகலுக்குப் பிறகு குறித்த புயல் வடக்கு திசை நோக்கி மேலும் நகர்ந்து, அதன் பிறகு அது வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிசா கடலோர பகுதியை நெருங்கும் எனவும் அப்போது ஆந்திரா, ஒடிசா கடலோர பகுதிகளில் பலத்த மழை முதல் மிக பலத்த மழை பெய்யும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்பின்னர் 4ஆம் திகதி ஜாவத் புயல் கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை மறுநாள் அது நகரும் திசையைப் பொறுத்து வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிசா பகுதிகளுக்கிடையே எந்த பகுதியில் கரையை கடக்கும் என்பது தெரியவருமென ஆய்வுமையம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையே அரபிக் கடலில் உருவாகிவரும் மற்றொரு காற்றழுத்த தாழ்வு பகுதி, மகாராஷ்டிரா- கோவா இடையே நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக உருவாகிவரலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. இது வலுவடைந்து வடக்குத் திசை நோக்கி நகர்ந்து குஜராத் கடலோரத்தை சென்றடையும். இந்த குறைந்த காற்றழுத்தம் காரணமாக மகாராஷ்டிராவில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மும்பையில் இன்று மிகப் பலத்த மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை