கள்ள காதலியை மண்வெட்டியால் அடித்து கொன்ற காதலன்


 புத்தல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குமாரகம பிரதேசத்தில் பெண் ஒருவர் மண்வெட்டியால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.


நேற்று (05) பிற்பகல் குறித்த பெண்ணுக்கும் அவரது கள்ள காதலனுக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் குமாரகம, பெல்வத்த பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளதுடன், சந்தேக நபரைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை புத்தல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.