இளம் பெண் நெடுங்கேணியில் சுட்டுக்கொலை !!
வவுனியா - நெடுங்கேணி - சேனைப்பிளவு பகுதியில் உந்துருளியில் பயணித்த பெண் ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இனந்தெரியாதோரால் துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதுடன், துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான பெண் சம்பவ இடத்திலேயே பலியானதாக தெரிவிக்கப்படுகிறது.
இ ன்று காலை 11.30 மணியளவில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா – நெடுங்கேணி – சேனைப்பிலவு பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதில் குறித்த பெண் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
சம்பவத்தில் பாலசுந்தரம் சத்தியகலா 34 வயதுடைய பெண்ணே இவ்வாறு பலியாகியுள்ளார்.
விவசாய தேவைக்காக பசளை வாங்க தாயாருடன் சென்ற நிலையில் உணவருந்திவிட்டு செல்ல முடிவெடுத்து மீண்டும் வீடு நோக்கி செல்கையில் வீதியில் நீர் நிறைந்திருந்தமையால் தாயாரை வீதியில் இறக்கிவிட்டு நீர் நிறைந்திருந்த இடத்தை கடந்த போதே துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் நபர் இறந்த பெண்ணின் உறவினர் எனவும், சந்தேக நபர் ஏற்கனவே கொலை குற்றத்துக்காக சிறையில் இருந்து வந்த ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
amilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை