எச்சரிக்கை குறியீட்டுடன் முல்லைத்தீவு கடற்கரை!
முல்லைத்தீவு கடலில் கடந்த ஞாயிற்றுக் கிழமை நீராடிக்கொண்டிருந்த வவுனியாவைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் முல்லைத்தீவு கடற்கரையில் சிவப்புக்கொடியொன்று பறக்கவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முல்லைத்தீவு சுற்றுலா கடற்கரையில் விடுமுறை நாட்களில் வெளியிடங்களில் இருந்து வரும் பல இளைஞர் யுவதிகள் கடலில் இறங்கி நீராடிவருகின்றமை வழங்கம்.
குறித்த இடத்தில் அபாய கடல் பகுதி என்ற எச்சரிக்கை பதாதைகள் சில இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள போதும் சுற்றுலாவிற்கு வரும் மக்களுக்கு சரியான விழிப்புணர்வு இல்லாத நிலை காணப்படுகின்றது.
முல்லைத்தீவு கடலில் கடல் அடி அதிகமாக காணப்படும் மாதமாக ஒக்டோபர் தொடக்கம் டிசம்பர் மாதம் வரையான காலப்பகுதி காணப்படுகின்றது.
இந்த நிலையில் முல்லைத்தீவு கடற்கரைக்கு வரும் மக்களுக்கான சரியான வழிகாட்டல்கள்,மற்றும் அறிவுறுத்தல்கள் எவையும் சம்மந்தப்பட்ட திணைக்களங்களாலோ அல்லது சமூக அக்கறைகொண்ட அமைப்புக்களாலோ வழங்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறித்த கடற்கரை பகுதியில் பொலிஸ் காவலரண் ஒன்றினை அமைக்குமாறு பல தடவைகள் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.
இவ்வாறான நிலையில் இந்தவார விடுமுறையில் மக்கள் கூடுவார்கள் என்பதனை கருத்தில் கொண்டு கடற்கரை அருகில் உள்ள பாதுகாப்பு தரப்பினரால் கடற்கரை பகுதியில் 6 இடங்களில் சிகப்புகொடிகள் பறக்கவிடப்பட்ட கம்பங்கள் நாட்டிவைக்கப்பட்டு கண்காணிப்புக்கள் போடப்பட்டுள்ளன.
அதோடு கடலில் எவரும் இறங்கவேண்டாம் என்ற எச்சரிக்கையாகவே இந்த கொடிகள் கடற்கரையில் பறக்கவிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை