முல்லைத்தீவு கடற்கரையில் மூங்கிலான கடற்கப்பல் கரைஒதுங்கியது! 

 


முல்லைத்தீவு மாவட்டத்தின் கடற்கரையில் வேற்று மொழியில் எழுத்தப்பட்ட மூங்கிலான படகு போன்ற வடிவமைக்கப்பட்ட கடற்கப்பல் ஒன்று நேற்று (19) கரை ஒதுங்கியுள்ளது.

மேலும் குறித்த படகு முல்லைத்தீவு சாலை முகத்துவாரப்பகுதியில் இது கரை ஒதுங்கியுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இது முற்றுமுழுதாக மூங்கில்கள் மற்றும் சப்பு பலகையினாலும் அமைக்கப்பட்டுள்ளது.

குறித்த படகு இந்தியாவிலிருந்து வந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.