வடமாகாண ஆளுநர் சீற்றம்!


நீண்டகாலமாக இழுபறி நிலையில் உள்ள காணி பிரச்சினைக்குத் தீர்வினை காண்பதற்காகவே பிரச்சினையில் உள்ள காணி உரிமையாளர்களை சந்திப்பதற்கு தான் தீர்மானித்துள்ளதாக கூறிய வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, ஆளுநர் கூட்டம் போட்டு தங்கள் காணியை வேறு ஒருவருக்கு வழங்கப்போவதாக சிலர் அறிக்கையிட்டிருக்கின்றனர்.

ஆனால் அவ்வாறான ஒரு கருத்தை தான கூறவில்லை எனவும் சட்டத்தை மீறி மக்களின் காணிகளை கையகப்படுத்த முடியாது எனவும் அவர் கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

30 வருடங்களாக காணிப் பிரச்சினை என்பது தமிழ் மக்களுக்கு காணப்படுகின்றது . சில பேருக்கு 20 வருடங்கள் சில பேருக்கு 30 வருடங்கள் சிலர் தமது காணியினை இன்று வரை தெரியாதவர்களும் இருக்கவே செய்கின்றனர்.

அவர்களுக்கு தமது காணி எங்கு உள்ளது என்பது தெரியாது. அவ்வாறான பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வு காண வேண்டும் என குறிப்பிட்ட அவர், அவ்வாறான பிரச்சினையை தீர்ப்பதற்கு ஒரு படிமுறை உள்ளது.

அதன்படி தற்போது புதிய சில வழிமுறைகளும் வந்துள்ளன. இவ்வாறான காணி பிரச்சனை விடயம் 30 ஆயிரத்துக்கும் மேல் இருந்த போதும், அது தற்போதுமூவாயிரமாக குறைந்துள்ளன.

எனவே ஏனைய தீர்க்கப்பட வேண்டிய விடயங்களுக்கு ஒரு நடைமுறையை பின்பற்ற வேண்டும். குறிப்பாக காணி பற்றி நாங்கள் பேசும் போது மிகவும் மனவேதனையாக உள்ளது . சிலர் கூறுவார்கள் தனது தாய் தந்தையர் வழங்கிய காணி என சிலர் உற்றார் உறவினர்கள் வழங்கிய காணி என்பார்கள் எனவே இதற்கு ஒரு முடிவினை எடுத்து இந்த காணிப் பிரச்சினைக்கு ஒரு தீர்வு கொடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

பொதுமக்களின் காணிகளை சட்ட திட்டங்களை மீறி கையகப்படுத்த முடியாது என தெரிவித்த ஆளுநர், தற்பொழுது சிலர் தவறான அறிக்கையிட்டுள்ளார்கள் என்றும், ஏதோ கூட்டம் வைத்து காணியை வேறொருவருக்கு வழங்கப் போகிறார் எனவும் கூறுகின்றனர்.

ஆனால்  நான் அவ்வாறு கூறவில்லை. எனவே நான் கூறாத ஒரு விடயத்தினை அறிக்கையிட்டுள்ளார்கள். அதாவது நான் ஆளுநர் பதவியில் உள்ள ஒருவன் சட்டத்தின் படியே சட்டத்தின் படி முறையின் படியே காணி பிரச்சனையை தீர்த்து வைக்க முடியும் என்றார்.

மேலும் சட்டத்தை மீறி என்னால் ஒன்றும் செய்ய முடியாது என தெரிவித்த ஆளுநர் , ஒரு பிரச்சனையை தீர்த்து வைக்க வேண்டுமாக இருந்தால் நான் சட்டத்தின் படியே செல்ல வேண்டும் எனவும் தெரிவித்தார்.  

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.