இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு!!

 


துறைமுகத்தில் தேங்கியுள்ள சுமார் 1500 அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிக்க தற்போது டொலர்களை வழங்க முடியாது என இலங்கை மத்திய வங்கி, வர்த்தக அமைச்சுக்கு அறிவித்துள்ளதாக அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த கொள்கலன்களை விடுவிப்பதற்கு தேவையான தொகை அடுத்த மாத நடுப்பகுதியில் சுமார் 25 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருக்கும் என மத்திய வங்கி வர்த்தக அமைச்சுக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்து கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த செய்தியில் தொடர்ந்தும் கூறப்பட்டுள்ளதாவது, துறைமுகத்தில் தேங்கியிருக்கும் 1,200 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் கொள்கலன்களை விடுவிக்க இறக்குமதியாளர்களுக்கு சுமார் 25 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குமாறு இரண்டு வாரங்களுக்கு முன்னர் வர்த்தக அமைச்சு மத்திய வங்கிக்கு கடிதம் எழுதியிருந்தது.

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள், வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக வர்த்தக அமைச்சு இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளது.

முதலில் மத்திய வங்கி டொலர்களை விடுவிப்பதற்கு இணக்கம் தெரிவித்திருந்த போதிலும், கடந்த வியாழன் அன்று அமைச்சர் பந்துல குணவர்தன மத்திய வங்கியின் ஆளுநரை சந்தித்து டொலர்கள் விடுவிக்கப்படாதது குறித்து கேட்டறிந்தார்.

அடுத்த மாதம் செலுத்த வேண்டிய 500 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டுக் கடன் தவணைகளை மீளச் செலுத்துவதற்கு மத்திய வங்கி முன்னுரிமை அளித்து வருவதால், கொள்கலன்களை விடுவிப்பதற்கான டொலர் தற்சமயம் வெளியிடப்பட மாட்டாது எனத் தெரியவருகிறது.  

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.