வெளிநாட்டு பரிசுப் பொருளை நம்பி பணத்தை இழந்த பெண்!


10 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் பணத்தை இழந்த நபர் வெளிநாட்டிலிருந்து பெறுமதியான பொருட்கள் அனுப்பபட்டுள்ளதாகவும் அதனை பெறுவதற்கு பணம் வைப்பிலிடுமாறு கூறி சுமார் 10 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் பணத்தை மோசடி செய்த கிளிநொச்சி பெண் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில்  தொியவருகையில்,

கிளிநொச்சி - திருமுறிகண்டி பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை கிளிநொச்சியை சேர்ந்த மற்றொரு பெண் தொடர்பு கொண்டு வெளிநாட்டிலிருந்து பெறுமதியான பொருட்கள் அனுப்பபட்டுள்ளதாகவும் அதனை பெறுவதற்கு பணத்தை வங்கி கணக்கில் வைப்பிலிடுமாறு கூறியுள்ளார்.

கிளிநொச்சி பெண் கூறியதை நம்பிய முறிகண்டியை சேர்ந்த பெண் சுமார் 10 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் பணத்தை வங்கியில் வைப்பிலிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கடந்த செப்டம்பர் மாதம் பொலிஸாரிடம் முறைப்பாடு தெரிவிக்கப்பட்ட நிலையில் பொலிஸாரின் விசேட நடவடிக்கை மூலம் கொழும்பு தெமட்டகொடை பகுதியில் வைத்து பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டவர் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்ட நிலையில்,எதிர்வரும் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் இவ்வாறான மோசடி நடவடிக்கைகள் தொடர்பில் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.