மாணவியுடன் 2 நாட்கள் தங்கிய மாணவன் - இலங்கையில் சம்பவம்!!


அண்ணனின் அடையாள அட்டையை பயன்படுத்தி மாணவியுடன் 2 நாட்கள் ஹோட்டலில் தங்கிய மாணவன்! மாணவி காணாமல்போனதாக நடந்த தேடுதலில் அம்பலம்..

தன் சகோதரனின் அடையாள அட்டையை பயன்படுத்தி 15 வயதான சிறுவன் சிறுமி ஒருவருடன் ஹோட்டலில் 2 நாட்கள் தங்கியிருந்த விடயம் அம்பலமாகியுள்ளது.

இந்த சம்பவம் கம்பளை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. கம்பளை நகரின் பிரபல பாடசாலையொன்றைச் சேர்ந்த 15 வயதான சிறுவன் இவ்வாறு சிறுமி ஒருவரை அழைத்துச் சென்று தங்கியுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கடந்த 19ம் திகதி தனியார் வகுப்புக்கு செல்வதாகக் கூறி நாவலப்பட்டியில் அமைந்துள்ள நீர் வீழ்ச்சியொன்றிற்கு சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்து நுவரெலியாவிற்கு சென்று ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ளனர். சிறுவர்களுக்கு ஹோட்டலில் தங்க அனுமதிக்கப்படமாட்டாது என்பதனால் தனது சகோதரனின் அடையாள அட்டையை குறித்த சிறுவன் பயன்படுத்தியுள்ளார்.

இணைய வழியில் கற்பதற்காக பெற்றோர் வாங்கிக் கொடுத்த அலைபேசியை விற்பனை செய்து, இந்த பயணத்திற்கான செலவுகளை செய்துள்ளார். மாணவி காணாமல் போனதாக பெற்றோர் செய்த முறைப்பாட்டை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் மூலம் இந்த விடயங்கள் தெரியவந்துள்ளன.

15 வயதான குறித்த பாடசாலை மாணவி பாலியல் ரீதியாக துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பாடசாலை மணவனை உடுநுவர சிறுவர் தடுப்பு நிலையத்தில் தடுத்து வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.