பெறுமதி மிக்க கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!!

 


சந்தேக நபர் ஒருவர் இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட ஒரு தொகை கேரள கஞ்சாவுடன்  காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


காவல்துறை விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலுக்கமைய, மினுவங்கொடை - கலகந்த சந்தியில் வைத்து குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.

மினுவங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடமிருந்து 30 கிலோ 673 கிராம் கேரள கஞ்சாவும், கைப்பேசியும், கஞ்சா கடத்தலுக்காகப் பயன்படுத்தப்பட்ட பாரவூர்தியும் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் பெறுமதி 70 இலட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக சந்தேக நபரும், அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவும் மினுவங்கொடை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.