இன்றைய உதவி வழங்கல் திட்டம் - {படங்கள் இணைப்பு} !!

 
கனடா நாட்டில் வசிக்கும் பத்தினி அம்மன் வீதி, கம்பர்மலை, வல்வெட்டித்துறையை தாய்நிலமாக கொண்டகுணரத்தினம் சுகேந்திரன் (சுதா) என்பவர் கிளி / நாகேந்திரா ஆரம்ப வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 42 மாணவர்களிற்கு சுமார் 1 இலட்சம் பெறுமதியான பொருட்களை கற்றல் முன்னெடுப்பு உதவிக்காக வழங்கி வைத்துள்ளார்.

புத்தகப்பைகள், மழை அங்கி, தொப்பிகள், கற்றல் உபகரணங்கள் என்பவற்றோடு பிஸ்கட், சமபோஷா, மைலோ போன்ற உணவுப் பதார்த்தங்களும் வழங்கப்பட்டன.இவ் உதவிகள் இவரது தாயாரின் நினைவு நாளினை முன்னிட்டு வழங்கப்பட்டதென்பது குறிப்பிடத்தக்கது. புலம் பெயர்ந்து இவ்வாறான சமூகநோக்கோடு வாழ்கின்றவர்கள் தமிழ் சமூகத்தை கரம் பற்றி தூக்கிவிடும் சக்திகள் என்பதை மறுக்கமுடியாது.இவரது பல்வேறுபட்ட உதவிகள் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பல பாடசாலைகளுக்கும் கிடைத்துள்ளது. இவரது பணிகளை சமூக ஆர்வலர்கள் பலரும் பாராட்டியுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.