புரட்சிகரமான மாற்றம் நாட்டுக்கு மிக அவசியம் - நத்தார் திருப்பலியில் பேராயர் எடுத்துரைப்பு!!
"நாடு தற்போது பயணித்துக்கொண்டிருக்கும் வழி மாற்றப்பட வேண்டும். புரட்சிகரமான மாற்றமொன்று கட்டாயம் வேண்டும்."
- இவ்வாறு கொழும்பு மறைமாவட்ட பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.
நத்தார் பண்டிகையை முன்னிட்டு ராகம தேவத்த தேசிய பெசிலிகா தேவாலயத்தில் பிரதான திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. பேராயர் தலைமையில் தேவ ஆராதனைகள் இடம்பெற்றன.
இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலில் 269 பேர் கொல்லப்பட்டனர். மதமொன்றின் பெயரால், மக்கள் கொலை செய்யப்படுவார்களேயானால், அப்படியான மதத்தில் எந்தவித பயனும் கிடையாது.
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் செயற்பட்டவர்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. இது ஏன்?" எனவும் பேராயர் கேள்வி எழுப்பினார்.
.....Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை