‘அயலான்' - நீதிமன்றம் இடைக்கால தடை!!
அயலான் திரைப்படத்தை வெளியிடுவதற்கு சென்னை மேல்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் அயலான் படத்தை இயக்குநர் ஆர். ரவிகுமார் இயக்கியுள்ளார். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தில் ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில், இப்படத்தை தயாரித்த 24 ஏ.எம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தன்னிடம் பெற்ற 5 கோடி ரூபா கடனை வட்டியோடு திருப்பி செலுத்தும் வரை படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் எனக் கோரி டே எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பு நிறுவனம், சென்னை மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் குழாம் இன்று(23) உத்தரவிட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை