இளைஞனின் உயிரைப் பறித்தது எறிகணை!!

 


கிளிநொச்சி - உமையாள்புரம் சோலை நகர் பகுதியில் பழைய எறிகணை ஒன்று வெடித்ததில் ஒருவர் பலியானார்.


இந்த சம்பவத்தில் 13 வயதுடைய சிறுவன் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


குறித்த பகுதியில் காணப்பட்ட பழைய எறிகணை ஒன்றை வெட்ட முற்பட்டபோது இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


சம்பவத்தில் உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 25 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.


குறித்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.