உணவுப் பஞ்சம் ஏற்படுவது வழமை - பந்துல!!
"இரண்டாம் உலகப் போர் நடந்த காலத்திலும் உணவுப் பஞ்சம் ஏற்பட்டது. எனவே, உணவுப் பஞ்சம் ஏற்படுவது தவிர்க்க முடியாதது" என்று வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
பொதுமக்கள் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் தமது வீட்டுத் தோட்டங்களில் ஏதாவது காய்கறிகளைக் கட்டாயம் பயிரிட்டுக் கொள்ளுமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.
உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு சம்பந்தமாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
"அனைத்து வீடுகளிலும் மிளகாய் செடிகள், கத்தரிக்காய் செடிகள், பசலைக் கீரை போன்றவற்றைப் பயிரிடுங்கள். அவற்றைக் குறுகிய காலத்தில் பயன்பாட்டுக்கு எடுக்க முடியும்.
துரித பயிர்ச்செய்கை குறித்த யோசனையை நாங்கள் முன்வைத்துள்ளோம்.
ஜனவரி மாதம் முதல் வீட்டுத் தோட்டங்களில் ஏதாவது ஒன்றைக் கட்டாயம் பயிரிட்டுக்கொள்ளுங்கள்" - என்றார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை