தாய் தீயவள் ஆவாளா?

 


 தாய் இருக்கும் வரை கவலை என்பதே மனிதனுக்கு இல்லை. செல்வம் அனைத்தும் அழிந்த பின்னும் அம்மா என்று அழைக்க வீட்டில் தாய் இருந்தால் போதும் அன்னம் அளிக்கும் தெய்வமே இருப்பதாக பொருள்.

- மகாபாரதம்

 நான் பார்த்ததிலேயே மிகுந்த அழகான பெண் என் அம்மா. நான் என் வாழ்க்கையில் பெற்ற அனைத்து வெற்றிகளுக்கும் அவரிடமிருந்து நான் பெற்ற தார்மீக, அறிவார்ந்த மற்றும் உடற்கல்வியே காரணமென்று கூறுவேன்.

- ஜார்ஜ் வாஷிங்டன்

 நான் எனது தாயின் பிரார்த்தனைகளை நினைவு கூருகின்றேன். அவை எப்பொழுதும் என்னைப் பின்தொடர்கின்றன. அவை வாழ்நாள் முழுவதும் என்னை பாதுகாப்பு அரணாக பற்றிக்கொண்டுள்ளன.

- ஆப்ரஹாம் லிங்கன்

 உங்களிடம் சொல்ல முடியாத அளவுக்கு உறுதியான செல்வம், தங்க நகைப் பெட்டகங்கள் மற்றும் தங்க கருவூலங்கள் என எல்லாம் இருக்கலாம், ஆனால், ஒருபோதும் நீங்கள் என்னை விடப் பணக்காரனாக முடியாது. அனைத்துச் செல்வங்களையும் விட உயர்ந்த, என்னை படிக்க வைத்த ஒரு தாய் என்னிடம் இருந்தாள்.

- ஸ்டிரிக்லேண்ட் கில்லன்

 எனது அம்மா ஒரு கடின உழைப்பாளி. அவர் தலைகீழாக நின்றேனும் ஒரு காரியத்தை செய்து முடிப்பார். மேலும் அவர் மகிழ்ச்சியாக இருக்க ஒரு வழியை கண்டறிந்துள்ளார். ‘மகிழ்ச்சி என்பது உங்கள் சொந்த பொறுப்பு' என்று அவர் எப்பொழுதும் சொல்வார்.

- கார்னர் ஜெனிஃபர்

 நான் கீழே விழும் போது எனக்கு உதவ ஓடி வருவார், ஒரு அழகான கதையை சொல்லி என் வலியை மறக்கச் செய்வார், காயங்களை குணமாக்க அவ்விடத்தில் முத்தங்களை பொழிவார், அவர் யார்? அவர் தான் என் அம்மா.

- ஆன் டெய்லர்

 தாய்மார்கள் மட்டுமே வருங்காலத்தை சிந்திக்க முடியும். ஏனென்றால், அவர்கள்தான் குழந்தைகளின் வடிவில் வருங்காலத்தைப் பெற்றெடுக்கிறார்கள்.

- மேக்ஸிம் கோர்கி


 தனக்கென்று சமைத்துக் கொள்ளாத ஜீவன் அம்மா. தனக்கென்று சம்பாதித்துக் கொள்ளாத ஒரே ஜீவன் அப்பா.

- யாரோ ஒருவர்

 தாயே மனிதர்களுக்கு தெய்வங்களுள் சிறந்த தெய்வம்.

- பாசகவி (மாத்யம வ்யயோகம்)

 மகன் தீயவன் என்று கேள்விபடுவதுண்டு. தாய் ஒருபோதும் தீயவள் ஆவதில்லை.

- சங்கராச்சாரியாரின் தேவி அபராத க்ஷமாபன ஸ்தோத்திரம்

 தாயின் அன்பு தூய்மையானது. பிள்ளையிடம் குறை காணாதது. சமர்த்தோ, அசமர்த்தனோ ஒல்லியோ குண்டோ 
எப்படி இருந்தாலும் தாய் தன் பிள்ளையை ரட்சிக்கிறாள். அவளுக்கு ஈடாக வேறு எவராலும் இதை செய்ய முடியாது.

- மகாபாரதம்




கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.