சர்வதேச அரங்கில் இலங்கைக்கு அவப்பெயர் - மைத்திரி!!


 அரசின் செயற்பாடுகளால் சர்வதேச அரங்கில் இலங்கைக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது என முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இந்நாள் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.


இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-


"சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்கள் நாட்டின் அரச இயந்திரத்தின் தன்மைக்கு ஏற்ற வகையிலேயே உதவிகளை வழங்கும். மனித உரிமை விவகாரங்கள், ஜனநாயகம், நீதிமன்றின் சுயாதீனத்தன்மை, பொலிஸ் திணைக்களத்தின் சுயாதீனத்தன்மை போன்ற காரணிகள் குறித்து அவதானிக்கப்படும்.


கடந்த காலங்களில் தொடுக்கப்பட்ட வழக்குகள் தற்போது தள்ளுடி செய்யப்படுகின்றன.


நாம் மிகவும் நெருக்கடியான நிலையில் இருக்கின்றோம். இன்று எம்மைப் பாதுகாப்பதற்கு எவரும் முன்வரவில்லை.


ஊழல், மோசடிகள், வீண் விரயங்கள் மிகவும் அதிகரித்துள்ளன. அதிகாரம் ஒரு சிலருக்கு இடையில் மட்டும் பகிரப்பட்டுள்ளது.


நாட்டின் தற்போதைய நிலைமைகளைக் கருத்தில்கொண்டால் எந்தவொரு தரப்பும் எமக்கு உதவி செய்யமாட்டார்கள் என்பதே யதார்த்தமாகும்.


சட்டம் - ஒழுங்கு, மனித உரிமை விவகாரங்களில் மோசமான நிலைமை காணப்பட்டால் எமக்கு எவரும் உதவ மாட்டார்கள்" - என்றார். 

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.