முடங்கியது கொழும்பின் முக்கிய வீதி!!
கணக்கியல் உயர் தேசிய டிப்ளோமா மாணவர் ஒன்றியத்தின் ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு - டார்லி வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
இதற்கமைய, காமினி சுற்றுவட்டம் ஊடாக டார்லி வீதி நோக்கி பயணிக்கும் பகுதியிலும், இப்பன்வில் சந்தியிலும் வாகன நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
எனவே, குறித்த வீதிகளூடாக பயணிக்கும் சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறும் காவல்துறையினர் கோரியுள்ளனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை