உதவி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்!!

 




தங்களுக்கான நியமனம் வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளுநர் அலுவலகத்திற்கு மத்திய மாகாணத்திற்குட்பட்ட உதவி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.


கடந்த 15ஆம் திகதி அவர்களுக்கான நியமனம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட போதிலும் கொவிட்-19 காரணமாக குறித்த நிகழ்வு பிற்போடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும் பயிற்சி பட்டதாரிகளுக்கான நியமனத்தை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், தங்களுக்கான தீர்வு வழங்கப்பட வேண்டும் என மத்திய மாகாணத்திற்குட்பட்ட உதவி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.