டென்மார்க்கில் எழுச்சிகரமாக நடைபெற்ற கேணல் கிட்டு உட்பட 10 மாவீரர்களினது 29 ஆவது ஆண்டு வணக்க நிகழ்வு
கேணல் கிட்டு உட்பட 10 மாவீரர்களினது வணக்க நிகழ்வு Herning மற்றும் Holbæk நகரங்களில் 22.01.2022 ( சனிக்கிழமை) அன்று மிகவும் எழுச்சிகரமாக நடைபெற்றது. நிகழ்வின் முதல் நிகழ்வாக மாவீரர்களது திருவுருவப்படத்திற்கு ஈகச்சுடரேற்றி, மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. தொடர்ந்து மக்கள் சுடரேற்றி, மலர் வணக்கம் செலுத்தினார்கள், அதனைத் தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது.
கேணல் கிட்டு அவர்கள் 16.01.1993 அன்று சமாதான செய்தியுடன் தமிழீழம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த வேளை இந்திய அரசின் நயவஞ்சகச் சதியினால் வங்கக்கடலில் கேணல் கிட்டு உட்பட 10 மாவீரர்கள் வீரகாவியமானார்கள். அவர்களைப் பற்றிய நினைவுப் பகிர்வுடன் எழுச்சிப் பாடல்களும் இடம்பெற்றன. நிகழ்வின் இறுதியாக “நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்” என்ற பாடலுடனும், தமிழர்களின் தாரகமந்திரமான “தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம்“ என்ற கோசத்துடன் நிகழ்வு நிறைவு பெற்றது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை