நாடு திரும்பினார் பசில் ராஜபக்ஷ!
நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்று அதிகாலை நாடு திரும்பினார்.
கடந்த டிசம்பர் 15 ஆம் திகதி அமெரிக்கா சென்றிருந்த பசில் ராஜபக்ஷ, இன்று அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
பசில் ராஜபக்ஷவை வரவேற்க இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றிருந்தார்.
இதேவேளை இந்த வாரத்தில் அரசாங்கத்தில் முக்கிய தீர்மானங்கள் சில எடுக்கப்படவுள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள் இல்லை