அபார வெற்றியுடன் தொடரை கைப்பற்றிய இலங்கை
இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் இலங்கை அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
அதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 254 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளது.
இலங்கை அணி சார்ப்பில் பெத்தும் நிஸ்ஸங்க 55 ஓட்டங்களையும், சரித் அசலங்க 52 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டனர்.
அதனடிப்படையில் சிம்பாப்வே அணிக்கு 255 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வோ அணி 24.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்களையும் இழந்து 70 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.
பந்து வீச்சில் ஜெப்ரி வென்டர்சே 4 விக்கெட்களையும், துஷ்மந்த சமீர மற்றும் ரமேஷ் மென்டிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தியிருந்தனர்.
அதனடிப்படையில் இலங்கை அணி 184 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இதற்கமைய, 2 - 1 என்ற ரீதியில் இலங்கை அணி தொடரை கைப்பற்றியுள்ளது.
கருத்துகள் இல்லை