கல்வியறிவை கேள்விகேட்கும் பலர் புலிகளின் வரலாற்றை ஒருதரம் திரும்பிப்பாருங்கள்..

 


இந்தியாவின் பேச்சை நம்பி இந்தியாவிடம் பெரும்தொகை ஆயுதங்களை ஒப்படைத்த புலிகளிடம் இந்தியாவுடன் யுத்தம் தொடங்கியபோது மிக குறைந்தளவான ஆயுதங்களே இருந்தன..

அன்று விடுதலைப்போரை விட்டு விலகிச்சென்ற போராளிகள், ஆயுதபற்றாக்குறை, பெருமளவான இந்தியா இராணுவம், காட்டிக்கொடுக்கும் தமிழினதுரோகிகள் என புலிகள் மிக இக்கட்டான நிலையில் மணலாற்றுகாட்டிற்குள் நகர்ந்தனர்..


அங்கும் புலிகளை அழித்துவிட இந்தியப்படைகள் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தையும் முறியடிக்க புலிகளிற்கு கைகொடுத்தது ஜொனி கண்ணிவெடிகள்தான்..

உள்ளூர் மூலப்பொருட்களைகொண்டு புலிகள் தயாரித்த இந்த வகை கண்ணிவெடிகள் கனவிலும் இந்திய/இலங்கை இராணுவத்தை மிரட்டியது என்றால் அது மிகையில்லை..


தம்மிடம் இருந்த மட்டுப்படுத்தப்பட்ட மூலப்பொருட்களை கொண்டு கடற்கலங்கள், சிறிய ரக விமானங்கள், எண்ணற்ற வகையான போரியல் ஆயுதங்கள் என செய்து உலகினையே அதிசயிக்கவைத்தவர்கள் புலிகள்..


போரியலில் மட்டுமல்ல தமிழீழ தனியரசை நிறுவி தமிழர் வாழ்வியலின் ஒவ்வொரு துறையினையும் செழுமைப்படுத்தி மிகச்சிறந்த நிர்வாகத்தை நடாத்திக்காட்டியவர்கள் அவர்கள்..


கல்வியறிவு நிறையப்பெற்ற பலரைகொண்டு எண்ணற்றவர்களிற்கு சகல துறைசார்கல்வியனையும் அன்று கற்பித்தார்கள் அவர்கள்..


இந்திய/சர்வதேச சதிகளாலும், தமிழர்கள் பலரின் துரோகத்தாலும்  மெளனித்துப்போன பெரும் ஒப்பற்ற போரியலின் நாயகர்கள் அவர்கள்..


இன்று அவர்களின் கல்வியறிவை கேள்விகேட்கும் பலர் புலிகளின் வரலாற்றை ஒருதரம் திரும்பிப்பாருங்கள்..


-அன்பரசன் அட்சயா-

23.01.2022

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.