மூன்று இலட்சத்தை கடந்த கொரோனா தொற்று!


கடந்த 24 மணிநேரத்தில் மூன்று இலட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. பிரான்சில் இரண்டாவது தடவையாக நாள் ஒன்றில் 300,000 இற்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.


கடந்த 24 மணிநேரத்தில் 328,214 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக பொது சுகாதார துறை (Santé publique France) அறிவித்துள்ளது.


1,999 பேர் மருத்துவமனைகளில் புதிதாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 325 பேர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


மொத்தமாக தற்போது 21,605 பேர் மருத்துவமனையிலும் அவர்களில் 3,815 பேர் அவசர சிகிச்சைப் பிரிவிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


அதேவேளை, இந்த 24 மணிநேரத்தில் 203 பேர் மருத்துவமனைகளில் சாவடைந்துள்ளனர். பிரான்சில் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்ததில் இருந்து இன்றுவரை 125,206 பேர் சாவடைந்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.