பால்மா விநியோகத்தில் குழறுபடிகள்!
நாட்டில் பால்மாக்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், வாழைச்சேனை பிரதேசத்திலும் பால்மா விநியோகத்தில் குழறுபடிகள் ஏற்பட்டுள்ளதாக பிரதேச வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.
பால்மாக்களை விநியோகம் செய்யும் நிறுவனங்கள், சிறு வியாபாரத் தளங்களுக்கு பால்மாக்களை வழங்காமல், பெரிய வியாபாரத் தளங்களுக்கு மாத்திரம் வழங்கிச் செல்கின்றதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, சிறு வியாபாரிகளும் நுகர்வோரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். அதேசமயம் , பெரிய வியாபார நிலையங்களில் பால்மாக்களுடன் இணைந்த வேறு பொருள்களை கொள்வனவு செய்வோர்களுக்கு மாத்திரமே பால்மாக்கள் வழங்கப்படுகிறன.
இந்த விடயம் தொடர்பாக கவனம் செலுத்தி, அனைவருக்கும் பால்மாக்கள் கிடைக்க வேண்டும் என வாழைச்சேனை வர்த்தக சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை