இலங்கைக்கு சீனாவில் இருந்து அரிசி நன்கொடை!
இலங்கைக்கு விரைவில் சீனாவில் இருந்து அரசி, நன்கொடையாக கிடைக்கும் என வர்த்தக அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
1952 ஆம் ஆண்டு இலங்கை – சீன இறப்பர், அரிசி ஒப்பந்தத்தின் 70 ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்த நன்கொடை வழங்கப்படவுள்ளது.
நாட்டின் தற்போதைய நிலை தொடர்பாக வர்த்தக அமைச்சர், சீனத் தூதரகத்தின் சிரேஷ்ட அதிகாரியுடன் அண்மையில் கலந்துரையாடியதாக அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார்.
மேலும் கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் ஏற்கனவே இலங்கை அரசாங்கத்திற்கு தேவையான உதவிகளை செய்து வருகிறது என்றும் வர்த்தக அமைச்சின் பேச்சாளர் கூறினார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை