கொழும்பில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!
கொழும்புக்குத் தேவையான குடிநீரின் அளவை மட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் வேகமாகக் குறைந்து வருவதே இதற்குக் காரணம். கொழும்புக்கு நீர் வழங்கும் களனி ஆற்றுக்கு நீர் வழங்கும் காசல்ரீ மற்றும் மவுசாக்கலை நீர்த்தேக் கங்கள் வேகமாக வறண்டு போவதாக கூறப்படுகின்றது.
இதன் காரணமாக பெப்ரவரி அல்லது மார்ச் மாதத்துக்குள் குறைக்கப்பட வேண்டும் என அரசாங்கத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
அதேசமயம் மின் உற்பத்திக்கும் நீர் அதிகளவில் பயன்படுத்தப்படுவதால், வறண்டு போகும் விகிதத்துக்கு ஏற்ப மின் உற்பத்தியை மட்டுப்படுத்தி குடிநீர் விநியோகம் செய்ய வேண்டியது அவசியமாகும் எனவும் அவர் கூறினார்.
இந்நிலையில் திடீர் மழை பெய்யாவிட்டால் நீர்மட்டம் மேலும் குறையும் என்றும் சிரேஷ்ட பேச்சாளர் மேலும் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை