கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அதிகரிக்கும் தொற்றாளர்கள்!
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப்பெறும் கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருவதாக கூறப்படுகின்றது.
இத்தகவலை , வைத்தியசாலையின் விசேட வைத்தியர் உபுல் திசாநாயக்க தெரிவித்துள்ளார். குறித்த நோயாளர்களுள் அதிகமானோர், கொவிட் நோயுடன் வேறு நோய் நிலைமைகளையும் கொண்டுள்ளதாக அவர் கூறினார்.
அதேநேரம், கொரோனா தொற்றுறுதியாகி குணமடைந்த நபர் ஒருவருக்கு, மீண்டும் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் விசேட வைத்தியர் உபுல் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவற்றினை தெரிவித்தார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
.jpeg
)





கருத்துகள் இல்லை