கணவர் மீது கோடரி தாக்குதல் - விளக்கமறியலில் மனைவியும் மாமியாரும்!


மதுபோதையில் தினமும் வந்து தகராறை ஏற்படுத்தும் கணவர் மீது அசிட் வீச்சு தாக்குதலை நடத்தி, கோடரியால் வெட்டிக்​ கொன்ற மனைவி மற்றும் மாமியார் விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களை இந்த மாதம் 20ஆம் திகதி வரை சந்தேகநப​ர்களை விளக்கமறியலில் வைக்குமாறு, இரத்தினபுரி பதில் நீதவான் பிரியங்க குணவர்ணசூரிய நேற்று உத்தரவிட்டார். சம்பவத்தில் இரு பிள்ளைகளின் தந்தையான 35 வயதுடைய நபரே அசிட் வீச்சுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதுடன், 31 வயதுடைய அவருடைய மனைவியும் 52 வயதுடைய மாமியாரு​மே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நேற்று முந்தினம் 8ஆம் திகதி இரவு 8.30 மணியளவில் உயிரிழந்த நபர் மதுபோதையில் வீட்டுக்கு வந்துள்ளதுடன், கையில் கத்தியை வைத்தக்கொண்டு மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதன்போது தனது தம்பியின் வீட்டுக்கு உயிரிழந்தவரின் மனைவி சென்ற நிலையில், அவர் அங்கேயும் சென்று தகராறு செய்துள்ளார்.

இதனையடுத்து ஆத்திரமடைந்த மனைவி தனது கணவன் மீது அசிட்டை ஊற்றி தம்பியின் வீட்டிலிருந்த கோடரியால் தாக்கியுள்ளார். சம்பவத்தில் காயமடைந்த நபர் இரத்தினபுரி போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், சந்தேகநபர்களான தாயும் மகளும் குருவிட்ட பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையில் நேற்று இரத்தினபுரி பதில் நீதவான் பிரியங்க குணவர்ணசூரிய முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோதே அவர்களை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.