கடலில் மூழ்கி யாழ். இளைஞர் பலி!!
அவுஸ்திரேலியாவில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் இளைஞர் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பவத்தில் யாழ்ப்பாணம் சாவகச்சேரியை சொந்த இடமாக கொண்ட, செல்வராசா சிறிபிரகாஸ் (29) என்பவரே உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
நண்பர்களுடன் விடுமுறையை கழிக்க சென்ற போது விக்டோரியாவின் தென்மேற்கில் உள்ள ஜீலாங் கடற்கரையில் அவர் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த நிலையில் இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.
குறித்த இளைஞர் மெல்பர்ன், எப்பிங் பகுதியில் வசித்து வருகிறார். அதிகாலை 4.35 மணியளவில் ரிச்சி பவுல்வர்டு கடற்கரையில் அவர் அலையில் அடித்து செல்லப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, மீட்புக்குழுவினர் தேடுதலை மேற்கொண்டனர்.
இதனையடுத்து மாலை வேளையில், ஜீலாங்கில் உள்ள கிழக்கு கடற்கரையின் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை