கனடாவில் காணாமல் போன தமிழ் இளைஞர் தொடர்பில் வெளியான தகவல்!
கனடாவில் தமிழ் இளைஞர் ஒருவரும் , யுவதி ஒருவரும் காணாமல் போயிருந்த நிலையில், இளைஞர் அகால மரணமடைந்துள்ளதாக அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சம்பவத்தில் யோசாந்த் ஜெகதீஸ்வரன் (29) என்ற இளைஞனும்,பிரசாந்தி அருச்சுனன் (28) என்ற யுவதியுமே காணாமல் போயிருந்தனர். இதனையடுத்து அவர்களை கண்டுபிடிக்க ரொறன்ரோ பொலிஸ் சேவை பொதுமக்களின் உதவியைக் கோரியிருந்த நிலையில் இருவரும் ஒன்றாக இருக்கலாமென கனடா பொலிசார் கூறியிருந்தனர்.
யோசாந்த் கடைசியாக ஜனவரி 15, 2022 அன்று மதியம் 12:10 மணியளவில் ஜேன் ஸ்ட்ரீட் மற்றும் ட்ரெத்வீ டிரைவ் பகுதியில் காணப்பட்டதுடன், அவர் கடைசியாக சிவப்பு நிற உட்புறம் மற்றும் CFMK 918 என்ற உரிமத் தகடு கொண்ட சாம்பல் நிற டொயோட்டா கேம்ரியை ஓட்டி சென்றதாகவும் கூறப்பட்டிருந்தது.
பிரசாந்தி அருச்சுனனுடன் அவர் இருப்பதாக புலனாய்வாளர்கள் கூறியிருந்த நிலையில் அன்று மாலையே அவர்கள் ஜேன் ஸ்ட்ரீட் மற்றும் ஃபின்ச் அவென்யூ வெஸ்ட் பகுதியை விட்டு வெளியேறிதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் குறித்த இளைஞன் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை