தூக்கத்திலேயே மரணமடைந்த தமிழ் இளைஞன்!
மெல்பன் Hampton Park-ஐச் சேர்ந்த ரமணன் ராஜ்குமார் என்ற இளைஞர் கடந்த 14ம் திகதி இரவு தூக்கத்திலேயே மரணமடைந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இவரது மரணத்திற்கான பின்னணி தொடர்பில் உறுதியாக எதுவும் தெரியாது எனவும் தமிழ் ஏதிலிகள் கழகத்தின் பேச்சாளர் அரன் மயில்வாகனம் தெரிவித்துள்ளார்
கடந்த சில மாதங்களுக்குள் அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்கள் மத்தியில் இவ்வாறான பல மரணங்கள் இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில், அரசின் இறுக்கமான அகதிகள் கொள்கை அவர்களை மனதளவில் கடுமையாக பாதித்துவருவதாகவும் திரு.அரன் மயில்வாகனம் குற்றம்சாட்டினார்.
இதேவேளை ரமணனின் இறுதி நிகழ்வுகளை நடத்துவதற்கான நிதிசேகரிப்பில் தமிழ் ஏதிலிகள் கழகம் ஈடுபட்டுள்ளதாகவும் திரு.அரன் மயில்வாகனம் தெரிவித்துள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை