நேற்று திடீர் தீ விபத்து!
சந்திரிகாமம் தோட்டத்தில் குடியிருப்பில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால் தொடர் லயக்குடியிருப்பில் ஒரு வீட்டிற்குள் ஏற்பட்ட தீயினால் குறித்த வீடு முற்றாக எரிந்துள்ளது.
இச்சம்பவம் நேற்று புதன்கிழமை (26.01.2022) இரவு டயகம பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மேலும் இந்த தீ விபத்தினால் குறித்த வீட்டில் இருந்த 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தீ ஏற்பட்ட போது வீட்டில் இருந்தவர்கள் கூச்சலிட்டதையடுத்து, அயலவர்கள் ஓடி வந்து ஏனைய வீடுகளுக்கு தீ பரவாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இதேவேளை, முற்றிலும் எரிந்த வீட்டில் பெருமளவிலான வீட்டு உபகரணங்கள், பெறுமதியான ஆவணங்கள், உடுதுணிகள் என பெருமளவிலான பொருட்கள் தீக்கிரையாகியுள்ளன.
மேலும் இச்சம்பவம் குறித்து டயகம பொலிஸ் நிலையத்திற்கும், தோட்ட நிர்வாகத்திற்கும் பிரதேசவாசிகளால் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் தீ பரவலுக்கான காரணங்களை கண்டறிய மேலதிக விசாரணகளை மேற்கொண்டு வருவதோடு, தோட்ட நிர்வாகம் இவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை