மீன்பிடித்துறை பாதிப்பு!!

 


திடீர் என அண்மையில் எரிபொருட்களின் விலையை அதிகரித்ததன் காரணமாக மீன்பிடித்துறை பாரிய அளவில் பாதிப்படைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இது தவிர, வெளிநாட்டவர்கள் இலங்கையின் கரையோர பகுதிகளில் நிலத்தினை கையேற்பதன் காரணமாகவும் மீன்பிடித்துறை பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் அகில இலங்கை மீனவர்கள் தொழிற்சங்கத்தின் தலைவர் அருண பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.


கரையோர பகுதிகளில் உள்ள மீன் வளங்கள் பாதிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


இது போன்ற பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்குவதாகத் தெரிவித்துள்ள அவர், இலங்கையில் உள்ள சகல மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகளும் ஒன்று கூடி இது குறித்து விரிவாக ஆராயவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


இந்த சந்திப்பில் எடுக்கப்படும் தீர்மானங்கள் குறித்துச் சம்பந்தப்பட்ட தரப்பினரின் கவனத்திற்குக் கொண்டு வரவுள்ளதாகத் தெரிவித்த அவர், தங்களது கோரிக்கைகள் உதாசீனப்படுத்தும் பட்சத்தில், கடுமையான தொழிற்சங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.