யாழ்ப்பாணம் உட்பட சில நகரங்களில் காற்று மாசுபாடு!
யாழ்ப்பாணம் உட்பட நாட்டின் நான்கு முக்கிய நகரங்களில் காற்று மாசுபாட்டின் விகிதம் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விடயத்தினைக் காற்று தர ஆய்வுகளின் மூத்த விஞ்ஞானியும் NBRO இன் சுற்றுச்சூழல் பணிப்பாளருமான சரத் பிரேமசிறி குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம் மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளிலேயே காற்றின் தர சுட்டெண் மிகவும் மோசமான நிலையில் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் வடகிழக்கு வளிமண்டலத்திலுள்ள மாசுபட்ட மேகங்கள், நிலவும் வடகிழக்கு பருவக்காற்று காரணமாக உள்நோக்கி கொண்டு வரப்பட்ட மாசடைந்த மேகங்களின் தாக்கமே இவ்வாறு அதிகரித்த காற்று மாசுபாட்டிற்கு காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான எரிபொருட்களின் பயன்பாடு அதிகரித்து வருகின்றமையும் காற்று மாசுபாட்டிற்கு ஒரு முக்கிய காரணமாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன் விளைவாக , குறிப்பாக மேல், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் அதிகளவில் பாதிக்கப்படலாம் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை