ஜேர்மனியிலுள்ள இலங்கை தூதுவரின் இழிவான செயல்!
ஜேர்மனியில் இருக்கும் இலங்கை தூதுவர் மனோரி உனம்புவே (Manori Unambuwe ) தனது இராஜதந்திர சிறப்புரிமைகளை துஷ்பிரயோகம் செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து ஜேர்மனியிலுள்ள இலங்கையர்களிடம் இருந்து வெளிவிவகார அமைச்சுக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் மனோரி உனம்புவேவின் விலையுயர்ந்த வீட்டிற்கு மாதம் 15,000 யூரோக்களும், வீட்டின் பராமரிப்புப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட இரண்டு தொழிலாளர்கள் மற்றும் தோட்ட முகாமையாளர் ஒருவருக்கு மாதம் 8,000 யூரோக்களும் செலுத்த வேண்டிய நிலைமை இலங்கை அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அவர் நியமிக்கப்பட்டு 2 அண்டுகளில் இலங்கைக்காக அவரால் எந்த வேலையும் செய்யப்படவில்லை, பல மாதங்களாக அவர் அலுவலகத்திற்கு வரவில்லை, அவருடைய அனைத்து வேலைகளும் அலுவலக ஊழியர்களாலேயே மேற்கொள்ளப்படுகின்றதென தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, அவரது இந்த பொறுப்பற்ற செயற்பாடு காரணமாக வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் குறித்து ஊழல் மற்றும் மோசடி நடவடிக்கைகள் இடம்பெற ஆரம்பித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும், இலங்கை தூதுவர் மனோரி உனம்புவேவின் சகோதரன் பெர்லினில் நடைபெற்ற வர்த்தக கண்காட்சியில் பல வர்த்தகர்களை ஏமாற்றியுள்ளார் எனவும், தூதுவரின் பெயரை பயன்படுத்தி பல்வேறு வர்த்தகர்களின் உதவியை நாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் சகோதரியின் பதவியை தவறாக பயன்படுத்திய சகோதரன் ஜேர்மனியில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜேர்மனின் தொழிலதிபர் ஒருவரால் பலமுறை முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து அவர் நாடு கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இதேவேளை, தற்போது தனது பதவிக்காலத்தை மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்க முயற்சித்து வரும் அவர், கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையின் போது இலங்கையில் தங்குவதற்காக வெளிவிவகார அமைச்சில் 35 நாட்கள் விடுமுறையைப் பெற்றுள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை